இப்படியும் ஒரு மனிதரா? தனியாளாய் நின்று குழந்தையை அடக்கம் செய்த தேநீர்கடைக்காரர்!

Default Image

தனியாளாய் நின்று குழந்தையை அடக்கம் செய்த தேநீர்கடைக்காரர்.

பெங்களூருவில் புறநகர் பகுதியான பிரேசர் டவுன் பகுதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் அப்துல் ரசாக். இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இவர், தேநீர்கடை நடத்தி வருவதுடன், தன்னார்வ பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நாற்பது வயது மதிக்கத்தக்க இந்த நபர் தனது கைகளில் இறந்த குழந்தையின் உடலை கைகளில் ஏந்தியவாறு கொண்டு செல்லும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் இதயங்களை நொறுக்கியுள்ளது.

பெங்களூர் செயின்ட் ஜான் மருத்துவமனையில் இருந்து, சிறுநீரக கோளாறு மற்றும் கொரோனா பாதிப்பால்  உயிரிழந்த குழந்தையை எடுத்து சென்று தனியாளாய் அடக்கம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அந்த பெண் குழந்தை மேற்குவங்கத்தை சேர்ந்தது. சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.’ என்று தெரிவித்துள்ளார்.

தன்னார்வலர்கள் மூலம் கிடைத்த தகவலையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்து சென்று உயிரிழந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த ரசாக்கின் தன்னலமற்ற சேவைக்கு குழந்தையின் பெற்றோர் மன நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்