அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த முதல்வர் பழனிசாமி.!
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான எம். ஆர். விஜயபாஸ்கரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான எம். ஆர். விஜயபாஸ்கருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருந்ததை அடுத்து கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது மூன்று பேரும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பலர் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக கூறியுள்ளார். அதில் வெளியிட்ட பதிவில், மாண்புமிகு அமைச்சர் திரு. M.R.விஜயபாஸ்கர் அவர்கள், அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளான செய்தியறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலன் விசாரித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு விஜயபாஸ்கர் அவர்கள், அவரது மனைவி, மகள் ஆகியோர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு அமைச்சர் திரு.M.R.விஜயபாஸ்கர் அவர்கள், அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளான செய்தியறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு அமைச்சர் @OfficeofminMRV அவர்கள், அவரது மனைவி,மகள் ஆகியோர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 19, 2020