வைஷ்ணவ தேவி கோவில் வரும் 16 முதல் திறப்பு.!
இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரில் பவான் பகுதியில் புனித தலங்களில் ஒன்றான வைஷ்ணவ தேவி கோவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.
இமயமலைத் தொடரின் மீது அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். புனித யாத்திரைக்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என பல தரப்பினர்களும் வருகின்றனர்.
இதனையடுத்து, வருகின்ற 16 முதல் மீண்டும் வைஷ்ணவ தேவி கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரும் பக்தர்களை மட்டும்அனுமத்திக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.