ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை 1000 படுக்கைகளை கொண்டதாக தரம் உயர்த்த வலியுறுத்தி கடிதம்- ரவிக்குமார் எம். பி.!

Default Image

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் பல வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை  1000 படுக்கைகளை கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினரான ரவிகுமார் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் ஒன்று ஜிப்மர் மருத்துவமனை. அங்கு கொரோனா நோயாளிகளுக்காக 250 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு மட்டும் உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் இந்த மருத்துவமனையில் விழுப்புரம் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனாவால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க மருத்துமனையால் முடியவில்லை என்று திணறி வருவதாகவும் கூறியுள்ளார்.

எனவே ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் உள்ள படுக்கைகளை 1000 ஆக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும் இந்த மருத்துவமனை கொரோனா பரிசோதனை நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. அதனையும் ஒரு நாளில் 1000 பேருக்கு பரிசோதனை செய்யும் விதமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்