சுதந்திர தின ஸ்பெஷலாக வருகிறதா மாஸ்டர் மூவி அப்டேட்.?

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலுள்ள Quit Pannuda என்ற பாடல் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தினை குறித்த அப்டேட் தான். அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்தில் உள்ள ‘Quit Pannuda’ என்ற பாடல் சென்சார் ஆகியுள்ளது. எனவே விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை விரைவில் மாஸ்டர் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ரசிகர்கள் இந்த பாடல் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024