26 வது முறையாக 100 அடியை எட்டிய பவானிசாகர் அணை.!
ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக உள்ள நீலகிரி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், பவானிசாகர் அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகளான நிலையில் 26 ஆவது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 105 அடி நீர் மட்டம் கொண்ட பவானிசாகர் அணையில் தற்போது 100 அடி நீர் நிரம்பி உள்ளது. பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 28 .69 டிஎம்சி உள்ளது. மேலும், நீர் வெளியேற்றம் ஆயிரம் கனஅடியாக உள்ளது.