சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா காவல் நிலையத்தில் சரண்.!

சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா கடந்த சனிக்கிழமை காவல்துறையிடம் சரணடைந்தார்.
கேரளாவில் சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா தனது அரை நிர்வாண உடலில் அவரது குழந்தைகள் ஓவியம் வரையும் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டதால் ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் தான் கைதாகாமல இருக்க முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
இதனால் நேற்று பிற்பகல் கொச்சி கமிஷனரேட்டின் கீழ் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் பாத்திமா தன்னை சரணடைந்தார் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு முறைகளை முடித்த பின்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 2018 செப்டம்பரில் கேரள மாநில பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் இருவரும் சபரிமலைக்கு சென்ற போது அங்கு இருந்த ஐயப்பன் பக்தர்களால் திருப்பி அனுப்பினர்.
ஆனால் பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.பிறகு இந்த விவகாரத்த்தில் தலையிட்ட கேரளா அரசு அவர்களை திருப்பி அனுப்ப போலீசாருக்கு உத்தரவு விட்டது.இதை தொடர்ந்து போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர்.
இந்த சூழலில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனு 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டும் ரெஹானா பாத்திமா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தனக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு கேரளா காவல்துறைக்கு மனு அனுப்பினார்.ஆனால் கேரளா காவல்துறை ரெஹானா பாத்திமாவிற்கு எந்தவித பாதுகாப்பும் கொடுக்கமுடியாது என கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024