Lebanon விபத்து: 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி அதிர்ச்சி.!

Default Image

லெபனானின் பெய்ரூட்டில் 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வெடிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்து, பெய்ரூட் நகரையே உலுக்கியது. இந்த விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் 4,000 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

“பெய்ரூட் நகரில் ஏற்பட்ட பெரிய வெடிப்பால் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடனும் உள்ளன ”என்று பிரதமர் அலுவலகம்  ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் ஜெர்மனியின் புவி அறிவியல் மையமான GFZ இன் படி, 3.5 ரிக்டர் அளவிலான பூகம்பத்தின் சக்தியுடன் தாக்கிய குண்டுவெடிப்புக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றுகூறப்படுகிறது .

இதற்கிடையில் உலகளாவிய தலைவர்கள் லெபனானுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்கி வருகின்றனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நேற்று ஒரு சிவில் பாதுகாப்புப் பிரிவையும் பல டன் மருத்துவ உபகரணங்களையும்  லெபனானுக்கு அனுப்படும் என்றார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, “பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பால்” பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடு எந்த வகையிலும் ஆதரவை வழங்க தயாராக உள்ளது என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்