காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு- கே.எஸ். அழகிரி
காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் புதிய கல்வி கொள்கை பல்வேறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது.இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,புதிய கல்விக்கொள்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் இதற்கு விளக்கம் அளித்து குஷ்பூ மீண்டும் பதிவிட்டுள்ள பதிவில்,புதிய கல்விக்கொள்கை குறித்து நான் கூறிய கருத்தும் ,கட்சியின் கருத்தும் வேறுபடுகிறது.இதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நான் தலையை ஆட்டும் ரோபோவாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என்று கூறினார். குஷ்பூவின் இந்த காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிற்சியின்மை என்று பதிவிட்டுள்ளார்.