சென்னை அருகே மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு!
நேற்று சென்னையில் தலைமைச் செயலகம் அருகே மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முதலமைச்சர் பழனிசாமி அளித்த பதிலை ஏற்க மறுத்து, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். முழக்கமிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பேரவைத் தலைவர் தனபால் , சமாதானம் செய்ய முயற்சித்தார். அவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சியினர் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் ரத யாத்திரைக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம்.எல்.ஏ.க்கள் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று சட்டப்பேரவை எதிரே உள்ள சாலையில் திமுக வினர் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.