ஆசிரமத்தில் உள்ள மைனர் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை.! ஒருவர் கைது.!
ஆசிரமத்தில் தங்கியிருந்த 10-14 வயதுக்குட்டப்பட்ட 10 மைனர் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குழந்தைகள் மற்றும் நலன்புரி மேம்பாட்டு அமைச்சகத்தின் நோடல் ஏஜென்சியான சைல்ட் லைனுக்கு மர்மநபர் ஒருவர் தொலைப்பேசியில் அழைப்பு விடுத்து ஆசிரமம் ஒன்றில் குழந்தைகள் சிலர் மோசமான முறையில் நடத்தப்படுவதாக கூறியுள்ளார். அதனையடுத்து உடனடியாக சைல்ட் லைனை சேர்ந்த அதிகாரிகள் சிலர் ஆசிரமத்துக்கு சென்று பார்த்து சந்தேகமடைந்ததை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி திரிபுரா மற்றும் மிசோரம் பகுதியை சேர்ந்த அந்த ஆசிரமத்தில் 10-14 வயதுக்குட்டப்பட்ட 10 மைனர் குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
அதனையடுத்து அந்த 10 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் , கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் உத்திரப் பிரதேசத்தில் உள்ள முசாபர் நகரை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், குழந்தைகளில் சிலர் மூன்று ஆண்டுகளாக அந்த ஆசிரமத்தில் தங்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் தனிமைப்படுத்தலில் வைத்து விட்டு சனிக்கிழமை கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படும் என்றும், நான்கு சிறுமிகளின் அறிக்கையின் படி சிஆர்பிசி பிரிவு 164ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 6 பேரின் அறிக்கைகளை திங்களன்று மாஜிஸ்திரேட் முன்பு கூறப்படும் என்றும் கூறியுள்ளார்