NCL விபத்து.! லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம் – கமல்ஹாசன்.!

Default Image

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தை குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி NCL 2-ம் அனல் மின் நிலையத்தில் நேற்றைய தினம் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனையடுத்து NCL நிறுவனத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களும், கிராம மக்களும் நிவாரண நிதி கேட்டு முற்றுகையிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் தங்களது கருத்துக்களையும், இரங்கல்களையும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது, கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம். விபத்துகளில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம். இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்