அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பதிவிட்ட பதிவு ! உடனடியாக நீக்கிய பேஸ்புக் நிறுவனம்
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் Nazis symbol விளம்பரங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வருகிற நிலையில், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட், காவல்துறை அதிகாரியால் இரக்கமற்ற நிலையில், கழுத்து நெரித்து கொல்லப்பட்டதை எதிர்த்து, அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
இந்நிலையில் வரும் நவம்பர் 3-ம் தேதி அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன தேர்தலுக்கு முன்பாக தடுப்பு ஊசியை கொண்டு வந்து வைரஸ் தொற்று நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார. கொரோனாவை வீழ்த்தாவிட்டால் அது தனக்கு எதிரான ஜனாதிபதி திரும்பி விடும் எனற எண்ணமும் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில்இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு வேகமாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமாக களமிறங்கியுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோரின் Nazis symbol பிரச்சார விளம்பரங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. இது தலைகீழான சிவப்பு முக்கோணத்தைக் கொண்டிருந்தது. இது ஒரு காலத்தில் நாஜிக்கள் அரசியல் கைதிகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் வதை முகாம்களில் நியமிக்க பயன்படுத்தப்பட்டது.
The Nazis used red triangles to identify their political victims in concentration camps. Using it to attack political opponents is highly offensive. @POTUS‘ campaign needs to learn its history, as ignorance is no excuse for using Nazi-related symbols. https://t.co/7R7aGLD7kl
— Jonathan Greenblatt (@JGreenblattADL) June 18, 2020
இது குறித்து பேஸ்புக் நிறுவனம் கூறுகையில் “வெறுப்புணர்வை தூண்டும் நாசிகளின் குறியீடு என்பதால் அந்த வீடியோவை நீக்குவதாக பேஸ்புக் நிர்வாகம் விளக்கம்தளிர்த்துள்ளது “. அதே போல் இது வெறுப்புணர்வை தூண்டும் குறியீடு இல்ல என டிரம்பின் பிரச்சாரக் குழு கூறியுள்ளது.