2020-ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி குறையுமா.? காரணம் இதுதான்.
இந்த ஆண்டில் குறைவான விலையில் 5ஜி மொபைல்போன்கள் சந்தைக்கு அதிகளவு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கொரோனா வைரஸ் ஆண்டில் மொத்த மொபைல் போன்களின் ஏற்றுமதி குறையும் என கூறப்படுகிறது.
இப்போ உள்ள காலத்தில் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அவகைள் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்தி வருகிறார்கள்.குறிப்பாக மொபைல் போன் பல்வேறு வேலைகளை சுலபமாக முடிக்க உதவுகின்றது. மேலும் இப்போது வரும் புதிய மொபைல் போன்கள் நமக்கு தேவைப்படும் வசதிக்கேற்ப பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டில் குறைவான விலையில் 5ஜி மொபைல்போன்கள் சந்தைக்கு அதிகளவு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு வாய்ப்பில்லை. அதாவது இந்த கோரோனா அச்சுறுத்தினால் இந்த ஆண்டில் மொத்த மொபைல் போன்களின் ஏற்றுமதி 14.6சதிவிகிதம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு 13.7சதவிகிதம் குறைந்து இந்த ஆண்டு மொத்தம் 1.3 பில்லியன் யூனிட்களாக இருக்கும் என்று வெளியிடப்பட்ட கார்ட்னர் கணிப்பு மதிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.