சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.!

Default Image

சென்னையில் மதுபான கடைகள் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சென்னையில் விரைவில் மதுபான கடைகள் திறக்கப்படும் என்று செய்தி வெளியான நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது சென்னையில் மதுபான கடைகள் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்திள்ளது.

 இன்று தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, பெருநகரமான சென்னைக்கு உள்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.டீக்கடை உணவு விடுதிகள் ஜூன் 7 வரை பார்சல் மட்டும் காய்கறி கடைகள் மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.மேலும் முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கலில் குளிர்சாதன வசதியை பயன் படுத்தாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் டாஸ்மாக் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 129 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7,891 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 6,781 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்