#BREAKING: உலகளவில் 50 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.!
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000,295 ஆக உள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலில் சீனாவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் அங்கு மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால், தற்போது சீனாவை தவிர மற்ற நாடுகளில் அதிகமாக கொரோனா தாக்கம் உள்ளது. இந்த கொரோனா தாக்குதலுக்கு அதிகமாக ஐரோப்பிய நாடுகள் தான் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும், அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் போன்ற நாடுகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் 1,570,583 பேரும், ரஷ்யாவில் 308,705 பேரும், ஸ்பெனில் 278,803 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000,295 ஆகவும், உயிரிழந்ததோர் எண்ணிக்கை 325,151 உள்ளது. இதில் ஆறுதல் தரும் செய்தியாக உலகளவில் இதுவரை 1,970,911 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.