நாளை இயங்கும் சிறப்பு ரயிலில் கம்பளிகள் கிடையாது – ரயில்வே !
நாளை இயங்கும் சிறப்பு ரயிலில் படுக்கை விரிப்பு மற்றும் கம்பளிகள் வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கதால், மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடித்து வருகிறது. இதனால், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 17-ம் தேதி ஊரடங்கு நிறைவடைதால், நாளை முதல் ரயில்களை படிப்படியாக மத்திய ரயில்வே அமைச்சகம் இயக்க திட்டமிட்டனர்.
இந்நிலையில், நாளை முதல் முதற்கட்டமாக மும்பை, சென்னை போன்ற 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயங்க உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த ரயிலில் படுக்கை விரிப்பு மற்றும் கம்பளிகள் வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.