ரூ. 5.48 கோடி மதிப்பிலான நவீன எக்ஸ்ரே வாகனங்களை கொடியசைத்து வைத்த முதலமைச்சர்.!
இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதுமான பரிசோதனை கருவிகள் இல்லாததால் சோதனை முடிவுகள் தாமதமாகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்ய பி.சி.ஆர்சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை முடிவை தெரிய 48 மணி நேரம்ஆகிறது. இந்நிலையில் பரிசோதனையை விரைவுபடுத்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை பரிசோதனை செய்ய ரூ.5.48 கோடி மதிப்பில் மொத்தமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.