கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இத்தாலி பிரதமரிடம் பேசிய பிரதமர் மோடி

Default Image

இத்தாலி பிரதமருடன் இந்திய  பிரதமர் மோடி  தொலைபேசி மூலம் பேசியுள்ளார். 

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 40,14,311 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 2,76,237 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டதில் 13,85,581 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 48,699 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலி 3-ஆம் இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,201 ஆகும்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,17,185 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 1,168 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.  

இதனிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகில் உள்ள பல நாட்டின் தலைவர்களுடன் பேசிவருகிறார்.இந்நிலையில் பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் கியூசெப்-வுடன் தொலைபேசியில் கொரோனா தடுப்பு குறித்து கலந்துரையாடியுள்ளார்.இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவிப்பதாக தெரிவித்தார் பிரதமர் மோடி.இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  59,662- ஆக உயர்ந்துள்ளது உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar
JMM - Congress
rain news today