டெஸ்ட் போட்டி மாற்றினால் மிக மோசமான நாளாக இருக்கும்.!
டெஸ்ட் கிரிக்கெட் மாற்றப்பட்டால் அது மிகவும் மோசமான நாளாக இருக்கும் என ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரரை சோதிக்க சிறந்த போட்டி என்றால் பலரும் கூறுவது, டெஸ்ட் போட்டிதான். ஐந்து நாட்கள் கொண்ட இந்த போட்டியில், ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு நேரம் பேட்டிங் செய்கிறார், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ந்து எவ்வளவு நேரம் மனஉறுதியுடன் பந்து வீசுகிறார் என்பதை பரிசோதிக்கும் போட்டியாக டெஸ்ட் போட்டி உள்ளது.
எப்போது, டி20 போட்டி அறிமுகம் செய்யப்பட்டதோ அதிலிருந்து, டெஸ்ட் போட்டியை பார்க்கும் ரசிகர்களின் ஆர்வம் குறைந்தது. டி20 விளையாடுவதால் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் களத்தில் நிற்பதில்லை. இதனால் , டெஸ்ட் போட்டிகள் நான்கு நாட்களுக்கள் முடிவடைந்து விடுகிறது.
இதையெடுத்து, ஐசிசி டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க ஆலோசித்து வருகிறது. ஆனால், விராட் கோலி போன்ற வீரர்கள் எந்தவொரு மாற்றமும் கொண்டு வரக்கூடாது என கூறிவருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக் கூறுகையில், என்னைப் பொறுத்த வரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டு தான் மிகவும் உயர்ந்தது.
என்னைப் பொறுத்த வரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுதான் தூய்மையான வடிவம். டெஸ்ட் கிரிக்கெட் மாற்றப்பட்டால் அது மிகவும் மோசமான நாளாக இருக்கும் என்றார்.