ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை ரூ.3.13 கோடி அபராதம் வசூல்!
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவது கடந்த ஏப்ரல்-14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்து மே-3ம் தேதி வரை உத்தரவிடப்பட்டது.
இதனால் மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 2,94,809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.