வலுவான கிராமங்கள் இருந்தால் தான் ஜனநாயகம் பலமாக இருக்கும் -மோடி .!
ஊராட்சி மன்ற தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினர். அப்போது, வலுவான கிராமங்கள் இருந்தால் தான் ஜனநாயகம் பலமாக இருக்கும் என தெரிவித்தார்.
கடந்த 1992-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினர்.
அப்போது, E-Gram மொபைல் செயலியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய மோடி, கொரோனா தடுப்பு பணியில் ஊராட்சிகளின் பங்கு குறித்து விளக்கம் அளித்தார்.கிராமப்புற சுயாட்சியை உறுதிப்படுத்துவதே இ-கிராம் ஸ்வராஜ் செயலி என்றும், வலுவான கிராமங்கள் இருந்தால் தான் ஜனநாயகம் பலமாக இருக்கும் என தெரிவித்தார்.
தற்போது, லட்சக்கணக்கான கிராமங்களில் இணைதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாம் செயல்படும் முறையையே கொரோனா வைரஸ் மாற்றி விட்டதாகவும், கொரோனா நம் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது என தெரிவித்தார்.