ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்டிக்கருடன் காரில் வலம் வந்த இளைஞர் கைது!
உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 20 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும், சில மருத்துவர்கள் அதிகாரிகளுக்கு மட்டும் வெளியே வர அவகாசம் கொடுக்கப்பட்டும் இருந்தது. ஆனால் இந்த தடையை மீறி சிலர் வெளியே வந்து அடிவாங்கவும் செய்கின்றனர், தப்பித்தும் செல்கின்றனர்.
சிலர் இதனால் நோயிலும் சிக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் தலைநகரான டெல்லியில் ஆதித்ய குப்தா என்ற 29 வயதுடைய இளைஞர் நூதனமான முறையில் போலீசாரை ஏமாற்றம் முயற்சித்துள்ளார். அதாவது இவர் கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர், ஊரடங்கு காரணமாக அவர் வெளியே சுற்ற முடியாததால் தன்னுடைய காரில் சைனர் வைத்து ஐ எஸ் ஆபிஸர் போல ஸ்டிக்கர் ஒட்டியபடி சுற்றியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்பொழுது தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி தான் என வாதிட்டாலும் போலீசாருக்கு எழுந்த சந்தேகத்தின் பேரில் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அப்பொழுது அதை அவர் காண்பிக்காததால் துருவித் துருவி கேள்விகள் கேட்கவே ஆதித்யா உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது இவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஜாமினில் அவர் வெளியில் வந்துவிட்டாராம்.