பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா உறுதி
பீகாரில் ஒரே குடும்பத்தை சேந்த 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓமனில் இருந்து பீகாரில் உள்ள சிவான் மாவட்டத்தில் பஞ்ச்வார் என்ற கிராமத்திற்கு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.இதற்கு முன்பு அந்த நபர் தனது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வந்துள்ளார்.அவரால் அவரது உறவினர்கள் 22 பேருக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அந்த நபரின் கிராமத்தில் உள்ள 2 பேருக்கும் கொரோனா பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இவரது குடும்பத்தில் 4 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர்.ஆனாலும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் சிவன் மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.இதன் விளைவாக சிவான் மாவட்ட எல்லை பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது.