கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப்புடன் கலந்துரையாடினர் பிரதமர் மோடி.!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகம் மக்களின் இயல்பு வாழக்கையை வெகுவாக பாதித்துள்ளது. வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்தையும் கடுமையாக சூறையாடி வருகிறது இந்த கொரோனா.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்க நாட்டின் அதிபர் ட்ரம்ப் உடன், தற்போது மெல்ல மெல்ல கொரோனா அதிகரித்து வரும் நம் நாட்டின் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இதில், இரு நாட்டிலும் கொரோனாவின் பாதித்து குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து கொரோனா நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. இறுதியில், இரு நாடுகளும் கொரோனா தடு யுத்தத்தில் இணைந்து செயல்பட இரு நாட்டு தலைவர்களும் முடிவெடுத்துக்கொண்டனராம். இதனை பிரதமர் மோடி தனது இணையதள பக்கத்தில் தெரிவித்தார்.