மத்திய அரசு பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு கிடையாது! – அரசு அறிவிப்பு.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்று சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்களில் மார்ச் 31இல் பணி நிறைவு பெரும் ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு அளிப்பதாக மாநில அரசு அறிவித்திருந்தது.
அது போல, மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி ஓய்வு பெறும் ஒல்லியார்களின் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என தகவல் பரவியது.
இதற்கு விளக்கம் அளிக்கும் பொருட்டு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மார்ச் 31இல் ஓய்வு பெரும் ஊழியர்கள் அதே நாளில் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவர். மேலும், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். எனவும், ஓய்வு பெரும் ஊழியர்களுக்கு பணிக்காலம் நீட்டிப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.