மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது முட்டாள்தனம் -சு.சாமி அதிரடி கருத்து

Default Image

கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பெரு மந்தத்தின் போது கச்சா எண்ணெய்யின் விலை சரிவை சந்தித்து. அதன் பிறகு தற்போது கொரோனோ காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை அதற்கு இணையான சரிவை சந்தித்துள்ளது.
உலகின் இதுவரை  105 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்து விலை சரியத் தொடங்கியது. விலை சரிவை தடுப்பதற்கு, உற்பத்தியை குறைத்து, தேவையை அதிகரித்தால் விலை குரைவை தடுக்கலாம் என  உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான, சவுதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை மேலும் பெரும் சரிவை சந்தித்தது. உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆகவே, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த வாரத்தில் குறைக்கப்பட்டது.இந்நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் சரிவடைந்ததை தொடர்ந்து, இந்த சாதகமான சூழலை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இதன்படி,

  • பெட்ரோலுக்கான கலால் வரி இரண்டு ரூபாய் முதல் 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
  • டீசலுக்கான கலால் வரி நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
  • இதுதவிர, சாலை வரி பெட்ரோலுக்கு ஒரு ரூபாயும்,
  • டீசலுக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.

கச்சா எண்ணெயின் விலை மிகப்பெரிய அளவில் சரிந்திருந்தாலும், கலால் வரி உயர்த்தப்பட்டதால், பெட்ரோல் மற்றம் டீசலின் தற்போதைய விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இதேபோல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயி விலை அதிகரிக்கும் போது அதை அனுபவிக்கும் மக்கள் அதே எண்ணெய்ய் விலை குறையும் போது மட்டும் ஏன் அதை அனுபவிக்க முடியவில்லை என்று உள்ளுக்குள் குமுறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்