முதல்வர் விரைவில் வெளியிடுவார் – அமைச்சர் காமராஜ்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை முதல்கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கியுள்ள நிலையில், இத்திட்டம் தமிழகம் முழுவதும் எப்போது விரிவுபடுத்தப்படும் என கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டிருப்பதால், ஸ்மார்ட் கார்டுகளின் மூலமாக பொதுமக்கள் தாங்களே பெயர் திருத்தம் செய்து கொள்ளும் வசதியும், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் குறித்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.