கொரோனா எதிரொலி ! சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம்

சபரிமலை கோவிலுக்கு மார்ச் 14 முதல் 18 வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கேரளாவில் வேகமாக பரவுவதையடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.சபரிமலை கோயிலில் மாத பூஜை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.