கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Default Image

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த  டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உகானில் சீனா முழுவதும் பரவியது.மேலும்  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில்  கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.பாதிக்கப்பட்டவர்கள் பத்தினம்திட்டா பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த குழந்தை பெற்றோருடன் இத்தாலி சென்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்