வரலாற்றில் இன்று(24.02.2020)…தமிழகத்தின் அதிசயம் செல்வி.ஜெ. ஜெயலலிதா பிறந்த தினம் இன்று….

Default Image

தமிழக வரலாற்றில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆண்கள் மட்டுமே களம் கண்ட தமிழக அரசியலில் தனிப்பெரும் சக்தியாய்…. வாழ்க்கையின் இறுதி நிமிடம் வரை போராடி வாழ்ந்து மறைந்தவர் செல்வி.ஜெ. ஜெயலலிதா. இத்தகைய இரும்பு பெண்மணியாய் திகழ்ந்த இவரை அம்மா… என்ற லட்சக்கணக்கணக்கான தொண்டர்களின் அன்புக்குரிய அழைப்பால் அழைக்கப்பட்டவர்.

Image result for ஜெ.ஜெயலலிதா

அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதுவரை தமிழகத்தில் கோலோச்சி இருந்த திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும்.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. 13 ஆண்டுகள் அரசியல் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர். அதேபோல் ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இத்தகைய ஆளுமையில் அவதாரமான முன்னால் தமிழக முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் குறித்த சிறப்பு தொகுப்பு.

பிறப்பு:

ஜெ.ஜெயலலிதா பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி 1948   கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம்-வேதவல்லி இணையரின் மகளாக பிறந்தார். இவரது பெற்றோர்கள் தந்தை ஜெயராம்-தாய் வேதவள்ளி ஆவர், ஜெயலலிதாவின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.

Image result for jayalalitha

ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது ஆன பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். ஜெயலலிதாவின்  இயற்பெயர் கோமளவல்லி. ஜெயலலிதாவின் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும்  அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார்.அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

திரைத்துறையில் ஜெயலலிதா:

  • 1964-ம் ஆண்டில் தமிழில் வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான பின்னர், அடுத்த ஓராண்டுக்குள் 23 படங்களில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது அந்தக் காலத்தில் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத சாதனை அது.
  • அப்படியாக ஒப்புக் கொண்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவர் வெற்றிவிழா நாயகியாகக் கொண்டாடப்பட்டார். இதனால் இந்தியத் திரைத்துறையிலேயே மிக அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற சாதனையும் அவருக்கு சொந்தமானது.
  • அம்மா அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் 28 படங்களிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 17 படங்களிலும் நடித்தார். இப்படியாக தமிழகத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களின் படங்களை மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டார்.
  • தெலுங்கிலும் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பெரும்பங்காற்றினார். தெலுங்கில் நடித்த மொத்தப் படங்கள் 29, அதில் வெற்றிபடங்கள் 28, அவற்றில் என்.டி.ராமராவுடன் நடித்த படங்கள் மொத்தம் 12.
  • 1966-ம் ஆண்டில் 16 படங்கள், 1968-ம் ஆண்டில் மட்டும் 21 படங்கள் என அவர் திரைத்துறையில் அசுர உழைப்பைச் செலுத்தினார். அம்மா அவர்கள் நடித்தவற்றில் 77 திரைப்படங்கள் 100 நாள்களுக்கும் மேல் ஓடியவை. 18 திரைப்படங்கள் தொடர்ந்து 25 வாரங்களுக்கும் மேல் ஓடிய சாதனைக்கு உரியவை.
  • அதிலும் தமிழ்த் திரையுலகில் அவரது சாதனை மிகப் பெரியது, கதாநாயகியாக நடித்த 89 தமிழ்த் திரைப்படங்களில் 85 திரைப்படங்கள் வெள்ளி விழாக் கொண்டாடிய வெற்றிப்படங்களாக அமைந்தன. இதனால் இன்றைக்கும் தமிழ்த் திரையுலகின் மிக வெற்றிகரமான கதாநாயகி என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான்.

அரசியல் அவதாரம்:

  • முதன்முதலில் கடந்த 1983 ஆம் வருடம் ஜெயலலிதாவை அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி அழகு பார்த்தார் அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர். அதையடுத்த ஒரு மாதத்தில் திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரச்சாரப் பொறுப்பு ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.  சூறாவளிப் பிரச்சாரம் செய்து அந்தத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமானார் ஜெயலலிதா.
  • அதனால், அதற்கு அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினராக்கி டெல்லி பாராளுமன்றத்துக்கு அனுப்பினார் எம்ஜிஆர். 1989 ல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகும் வரை ஜெயலலிதா அப்பதவியில் தொடர்ந்தார்.
  • 1984 ல் எம்ஜிஆர் தொடர்ச்சியான சிறுநீரகக் கோளாறு மற்றும் நீரழிவு நோயால் அவதியுற்று வந்தார். அவரால் அந்த உபாதைகளிலிருந்து முழுவதுமாக விடுபட முடியாமல் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதானது. ஆனால் மக்கள் எம்ஜிஆரின் மீதும் அதிமுகவின் மீதும் இரட்டை இலையின் மீதும் கொண்ட நம்பிக்கை மற்றும் அபிமானத்தால் மீண்டும் தங்களது அபிரிமிதமான வாக்குகளை எம்ஜிஆருக்கே அளித்து அவரை முதல்வராக்கி அழகு பார்த்தார்கள்.
  • எம்.ஜி,ஆர். பதிவியேற்ற மூன்றே மாதங்களில் எம்ஜிஆர் மீண்டும் மருத்துவமனை சிகிச்சையில் ஆழ்ந்து போனார். நியூயார்க் புரூக்ளின் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்ட போதும் இந்தியா திரும்பிய பின் 1987 டிசம்பர் 24 ஆம் நாள் உடல்நலக் குறைபாடு காரணமாக இவ்வுலகை விட்டு மறைந்தார்.
  • அவரது மறைவையொட்டி தமிழகமெங்கும் கலவரம் வெடித்தது. இறுதி ஊர்வலத்தில் சுமார் 10 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். 30க்கும் மேற்பட்ட எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியாகினர்.
  • ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக கிடத்தப்பட்டிருந்த எம்ஜிஆர் உடலுக்கு அருகே தலைமாட்டில் தொடர்ந்து 21 மணி நேரங்கள் நின்று கொண்டே இருந்த ஜெயலலிதாவுக்கு அங்கிருந்த ஜானகி ஆதரவாளர்களால் சொல்லவொண்ணாத அவமானங்கள் நேர்ந்தன.
  • ஆனாலும் மனமுடையாது தனது அரசியல் குருவின் சடலத்தின் அருகே அசையாச் சிலையென நின்றிருந்தார் ஜெயலலிதா. எம்ஜிஆர் உடல் இறுதிப் பயணத்துக்காக ராணுவ வாகனத்தில் ஏற்றப்படுகையில் ஜெயலலிதாவும் உடன் செல்ல விரும்பி வாகனத்தில் ஏற முயற்சித்தார். அப்போது ஜானகியின் உறவினர் ஒருவர் ஜெயலலிதாவை நோக்கி காலால் உதைத்து மிக மோசமான வசைச் சொல் ஒன்றை அவரை நோக்கி உதிர்த்தார். அதை கண்டு ஜெயலலிதா திகைத்து நிற்க, கலவரமான சூழலை சமாளிக்க ஜெயலலிதாவை அங்கிருந்து அப்புறப்படுத்தி வீட்டுக்கன்னுப்ப வீடு வரை துணை வந்தனர் காவலர்கள்.

முதல்வராக அமர்ந்த கதை:

எம்ஜிஆர் மறைவின் பின் திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர்  இடைக்கால முதல்வரானார். ஆனால் ஜானகி அரசை எதிர்த்து ‘ஜனநாயகப் படுகொலை’ என ஜெயலலிதா ஆளுநரிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட நிலவரம் கலவரமாகி ஜானகி அரசு கலைக்கப்பட்டது. அதன் காரணமாகவே ஜெயலலிதாவின் தேர்ந்த அரசியல் காய்நகர்த்தல்களின் முன் அவர் தோற்றுப் போனார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுபட்டது.

 

Image result for ஜெ.ஜெயலலிதா

‘ஜெ’ தலைமையில் ஓரணியும்,  ‘ஜா’ தலைமையில் ஓரணியுமாக  இரு அணியினரும் கட்டிப் புரண்டு சண்டையிடாத குறையாக இருந்தனர். இம்முறை ஜா அணியை பின்னுக்குத்தள்ளி மக்களது ஏகோபித்த ஆதரவைப் பெற்றது ஜெ அணி. போடிநாயக்கனூர் தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவியாக முதன்முதலில்  சட்ட சபைக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு பெண் அமர்வது இதுவே முதல்முறை. அந்த வெற்றி மட்டுமல்ல, ஒரே மாதத்தில் தனக்கு எதிராக இருந்த ஜானகி அணியையும் சாம, பேத, தான, தண்ட முறைகளில் ஒன்றிணைத்து தனது தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கினார் ஜெயலலிதா. பிரிவினையின் போது முடக்கப்பட்ட கட்சியின் இரட்டை இலைச் சின்னமும் திரும்பப் பெறப்பட்டது. பின் தனது தொடர்ச்சியான அயாரத உழைப்பாள் பல வெற்றிகளை பெற்று பலகோடி தொண்டர்களைக் கட்டி ஆண்டார். இவர் இதுவரை,

  • 24-06-1991 – 12-05-1996 வரை முதல்முறையாக  முதல்வராகப் பதவி வகித்தார்.
  • 14-05-2001 – 21-09-2001 (இரண்டாம் முறை முதல்வரான போது டான்ஸி வழக்கில் பதவியிழக்க அவருக்குப் பதிலாக ஓ.பன்னீர் செல்வம் 21-09-2001 – 01-03-2002 வரையிலுமான காலகட்டத்தில் முதல்முறை முதல்வரானார்)
  • 02-03-2002 – 12.05-2006 மூன்றாவது முறை முதல்வரானார்.
  • 16-05-2011 – 27-09-2014 நான்காவது முறை முதல்வரானார் ( சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை செல்ல நேர்ந்ததால் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் 29-09-2014 – 22-05-2015 வரை இரண்டாம் முறை தமிழக முதல்வரானார்.
  • 23.-05-2015 –  23-05-2016 வரை ஐந்தாம் முறை தமிழக முதல்வரானார்
  • 23-05-2016 –  05-12-2016 வரையிலான காலகட்டத்துக்கு மீண்டும் ஆறாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது மரணச் செய்து கேட்டு அவர்கள் வெளிப்படுத்திய கட்டுக்கடங்காத அழுகையொலி உறுதிப்படுத்தியது. இவருக்கு, காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு என்ற காரணங்களுக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்பு 2016 டிசம்பர் 5-ஆம் தேதி அன்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது.

Image result for jayalalitha

தன்னைச் சுற்றி எப்போதும் பகைமை இருந்தபோதிலும் தனி ஒரு நபராய் அவற்றைக் கண்டு அஞ்சாமல் தான் வாழ்ந்த காலம் முழுதும் துணிச்சலான சாதனைப் பெண்ணாக, நிகரற்ற அரசியல் தலைவியாக, பெண்களுக்கு முன் மாதிரியாக  வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. இன்று ஜெயலலிதா மறைந்திருக்கலாம் ஆனால் அவர் என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar
JMM - Congress
rain news today