ரூ.2,000 நோட்டு செல்லாது..? ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்.!
- ரூ.2,000 நோட்டு செல்லாது என சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் வெளியானது.
- அதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதுபோன்ற எண்ணம் இதுவரை மத்திய அரசிடம் இல்லை. மேலும் இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை என அதிகாரிகள் கூறினார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. பின்னர் அந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500 மற்றும் ரூ.200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய ரூ.2,000 நோட்டு வந்த பிறகு பொதுமக்கள் பல பிரச்சினைகள் சந்தித்து வருகின்றனர். அதில் குறிப்பாக சில்லரை மாற்ற மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிடுவது நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.களில் வருகின்ற மார்ச் 1-ம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகள் வைக்கப்போவதில்லை அதற்கு பதிலாக 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் நிரப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியவை ,ரூ.2,000 நோட்டு செல்லாது என சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் தவறானவை அதுபோன்ற எண்ணம் இதுவரை மத்திய அரசிடம் இல்லை. மேலும் இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை. ஏ.டி.எம். மையங்களில் வழக்கம்போல் ரூ.2,000 நோட்டுகள் நிரப்பப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறினார்கள்.