என் பேரனாக நினைந்து தான் சிறுவனை செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன்-அமைச்சர் விளக்கம்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்ற சொன்ன நிலையில் ,என் பேரனாகவே அந்த சிறுவனை கருதி செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைத்தார்.உடனே இரண்டு சிறுவர்கள் வந்த நிலையில் ஒரு சிறுவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் செருப்பை எடுத்து ஓரமாக வைத்தார்.அமைச்சருடன் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.ஆனால் அமைச்சரின் இந்த செயல் பெரும் சர்ச்சையாக மாறியது.இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கத்தில்,என் பேரனாகவே அந்த சிறுவனை கருதி செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன்.கழற்ற சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.