INDvsNZ: அதிரடி காட்டிய ஹிட்மேன் , ராகுல் .! 164 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா .!

- இன்று இந்தியா ,நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
- முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர்.
இன்று இந்தியா ,நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் ஸ்காட் 2 விக்கெட்டை பறித்தார்.164 ரன்கள் இலங்குடன் களமிறங்கவுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் ,சஞ்சு சாம்சன் இருவரும் இறங்கினர். 4-வது போட்டியை போல இந்த போட்டியிலும் சஞ்சு சாம்சன் ஆட்டம் தொடக்கத்திலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் 4-வது போட்டியில் 8 ரன் எடுத்து வெளியேறினார். இப்போட்டியில் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர்.இதையெடுத்து கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.அதிரடியாக இருவரும் விளையாடினர். சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் எட்டாமல் 45 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்த வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர்.அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் விளாசினார்.அடுத்த சிலநிமிடங்களில் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக 60* ரன்னில் வெளியேறினர்.பின்னர் இறங்கிய சிவம் துபே 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் அடித்தார்.இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024