ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் தாக்கக்கூடிய போர்விமானங்கள் தஞ்சை விமானப்படையில் இணைப்பு.!

Default Image
  • தஞ்சையில் உள்ள விமானப்படையில் 8 சுகோய் – 30MKI போர் விமானங்கள் சேர்க்கப்பட்டது.
  • இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் நீர், நிலம் மற்றும் ஆகாயம் ஆகியவற்றிலிருந்து செலுத்த முடியும்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்திய விமானப்படை சார்பில் பிரம்மோஸ் ஏவுகணையை சோதனை செய்யப்பட்டது.அந்த சோதனையில் மிக துல்லியமாக இலக்கை தாக்கி சாதனை படைத்தது.பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் சுகோய் -30MKI  போர் விமானங்கள் விமானப்படைக்கு அதிக பலம் கொடுக்கும் என பிபின் ராவத் தெரிவித்தார்.

இந்தியாவின் முக்கிய விமானப்படை தளங்களில் களமிறக்க இந்திய பாதுகாப்பு படை முடிவெடுத்துள்ளது.அதன் ஒரு கட்டமாக இன்று தஞ்சையில் உள்ள விமானப்படை தளத்தில் 8 சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் ஒப்படைக்கப்பட்டது.

தென்னிந்தியாவின் முதல் அதிநவீன போர் விமானமாக சுகோய் – 30MKI விமானங்களை கருதப்படுகிறது. இந்த போர் விமானங்கள் பிரம்மோஸ் என்ற ஏவுகணைகளை சுமந்து சென்று செல்லக்கூடியது.இந்த போர் விமானங்களுக்கு ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 1500 கிலோமீட்டர் பயணம் செய்யக் கூடியது.

இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் நீர், நிலம் மற்றும் ஆகாயம் ஆகியவற்றிலிருந்து செலுத்த முடியும். பிரம்மோஸ் ஏவுகணைகள் ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் சென்று தாக்கக் கூடியது. இந்த போர் விமான அறிமுக விழாவில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விமானங்கள் விமானப்படை பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தாமல் இந்திய பெருங்கடலில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்கவும்  பயன்படுத்த உள்ளனர். இதனால் தென்னிந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிபின் ராவத் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer