ஹேமந்த் சோரன் அதிரடி.! பாஜக அரசு தொடர்ந்த போராட்ட வழக்குகள் வாபஸ்.!

- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.
- போராட்டத்தில் ஈடுபட்டபோராட்டக்காரர்கள் மீது பாஜக அரசு சார்பில் தொடர்ந்த ஆயிரக்கணக்கான வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30 -ம் தேதி தொடங்கி, இந்த மாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்தும் , ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. மெகா கூட்டணி வைத்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும்,காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரீய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி , தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும் ஹேமந்த் சோரன் அலுவலகத்துக்கு சென்று முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சிறிது நேரத்தில் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக அரசு சார்பில் தொடர்ந்த ஆயிரக்கணக்கான வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் ஜார்க்கண்டில் இரட்டை குத்தகை சட்டங்கள் தொடர்பான திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் நடத்தினர் .அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக ஹேமந்த் சோரன் உத்திரவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024