தனக்கென தனி இயங்குதளத்தை உருவாக்கி வரும் பேஸ்புக் நிறுவனம்! ஓரியன் புது அப்டேட்!

- இனி பேஸ்புக் இயங்குதளமானது அதன் தனி இயங்குதளத்தின் இயங்க உள்ளதாம்.
- பேஸ்புக் இயங்குதளம் தற்போது வேக வேகமாக தயாராகி வருகிறதாம். இதற்கு ஓரியன் என பெயரிடப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளம்தான் பேஸ்புக். இந்நிறுவனம் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை மட்டும் சார்ந்திருக்காமல் தற்போது தனக்கென புதிய இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது. இந்த இயங்குதள உருவாக்க பணியை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக இருந்த மார்க் லுகாவ்ஸ்கி மேற்கொண்டுள்ளார்.
இந்த இயங்குதளம் எப்போது வெளியாகும் என தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், பேஸ்புக் இதை தனக்கென தனி இயங்கு தளமாக உருவாக்கி வருவது உறுதியாகியுள்ளது. எதிர்காலத்தில் ஃபேஸ்புக் ஹார்டுவேர் கூகுளில் மென்பொருளை சார்ந்திருப்பதான தேவை ஏற்படாது. ஆதலால், பேஸ்புக் ஹார்டுவேர் மீது எந்தவித கட்டுப்பாடும் வருங்காலத்தில் இருக்காது என அதன் பேஸ்புக் தலைமை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் தற்போது இருக்கும் இயங்குதளமானது தங்களுக்கே போட்டியாக வரும். அதனால் எங்களால் அந்த இயங்குதளங்களை நம்ப முடியாது. அதனால் எங்களுக்கு தேவையான இயங்குதளத்தை நாங்களே தயாரிக்க முன்வந்து விட்டோம். என பேஸ்புக் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த இயங்குதளத்திற்கு ஓரியன் என பெயரிடப்பட்டுள்ளதாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024