ஆய்வில் அதிர்ச்சி தகவல் !இனி இந்த மாத்திரைகளை வாங்காதீர்கள் ….

Default Image

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை தயாரித்து  பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அனுமதி பெறாமல் விற்பனை செய்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த லண்டன் குயின்மேரி பல்கலைக்கழகம் மற்றும் நியூகேசில் பல்கலைக்கழகத்தை (Newcastle University) சேர்ந்த ஆய்வாளர்கள், இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, 2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் விற்பனையான, 2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை ஒரே மாத்திரையில் வழங்கும் எப்டிசி(FDC) ஆன்ட்டிபயாட்டிக் ஃபார்முலாக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 64 சதவீத மருந்து ஃபார்முலாக்கள், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாதவை. இந்த ஃபார்முலாக்களின் படி, பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 3 ஆயிரத்து 300 வணிகப் பெயர்களில் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்துள்ளன. வரைமுறையின்றி ஆன்ட்டிபயாட்டிகளை தயாரித்து விற்பனை செய்வதால், நோய்க்கிருமிகள் மருந்துக்கு கட்டுப்படாமல் எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்வது பெரும் சவாலாக உருவெடுத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்