எங்களுக்கு சம்மட்டி அடி..!என்றால் உங்களுக்கு மரண அடி..!மு.க ஸ்டாலின்

- எங்களுக்கு சம்மட்டி அடி என்றால் உங்களுக்கு மரண அடி என்று மு.க ஸ்டாலின் ஆவேசம்.
- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றி முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக தேர்தல் நடைபெற உள்ளது.வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.எதிர்கட்சியாக உள்ள திமுக உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசு அறிவித்த அறிவிப்பாணை எதிர்த்து மனு தாக்கல் செய்தது.இதற்கு பதில் மனுவை தமிழக அரசும் தாக்கல் செய்தது.இந்நிலையில் விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சம்மட்டி அடி என்றால் அதிமுகவுக்கு அது மரண அடி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று திமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு முறையாக வராத நிலையில் பல்வேறு தகவல் பரப்பப்படுகிறது
மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது தற்போதாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றி முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025