மருத்துவ மாணவர்களே உஷார்! கோடிக்கணக்கில் பண மோசடி செய்தவர் கைது …..

மத்திய குற்றப்பிரிவு போலீசார் மருத்துவச் சீட்டு வாங்கி தருவதாக 20க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த நபரை கைது செய்தனர்.
சென்னை எழும்பூரை சேர்ந்த குமார் என்பவர், தமது மகனுக்கு மருத்துவச்சீட்டு வாங்குவதற்காக, ராஜேஸ்வரன் என்பவரிடம் 35 லட்சம் ரூபாயை கடந்த 2013 ஆம் ஆண்டு கொடுத்தார். பூனேவில் உள்ள மருத்தவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறிய ராஜேஸ்வரன், பின்னர் தலைமறைவானார். புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தர்மபுரியில் வைத்து ராஜேஸ்வரனை இன்று கைது செய்தனர்.
விசாரணையில் மருத்துவ இடம் வாங்கி தருவதாக ராஜேஷ்வரன் பல்வேறு மாவட்டங்களில் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேஸ்வரன் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். பல்வேறு இடங்களில் அவர் மீதுள்ள புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024