உலக அழகி போட்டியில் கலந்துகொண்ட வர்த்திகா சிங் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!
- இந்தாண்டு உலக அழகி பட்டத்தை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஸிபிணி டுன்சி என்பவர் வெற்றிபெற்றார்.
- இப்போட்டியில் இந்தியா சார்ப்பில் வர்திகா சிங் என்பவர் கலந்து கொண்டு டப் 20இல் இடம்பெற்றார்.
இந்தாண்டு உலக அழகி போட்டி லண்டனில் நடைபெற்று முடிந்தது. இதில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஸிபிணி டுன்சி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு வெற்றிகண்டார்.
இதில் இந்தியாவை சேர்ந்த வர்த்திகா சிங் முதல் 20 இடங்களுக்கு முன்னேறி இருந்தார். அடுத்த சுற்றுக்கு முன்னேற வில்லை. இந்தியா சார்பாக உலக அழகி போட்டியில் கலந்து கொண்ட வர்த்திகா சிங் பற்றி அறியாத சில விஷயங்கள்.
இவர் ஆகஸ்ட் 27, 1993இல் பிறந்தார். 26 வயதாகும் வர்த்திகா சிங் லக்னோவில் பிறந்து அங்கேயே படித்து பொது சுகாதாரம் பிரிவில் முதுகலை பட்டம் வென்றார். இவர் உலக வங்கியில் தர உத்தரவாத பொது பிரிவில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இவர் 2015இல் பெமினா மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2015இல் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார். 2018ஆம் ஆண்டு பியூர் ஹியூமன் எனும் பெயரில் பொதுமக்கள் நலன் சார்ந்த ஒரு அமைப்பை தொடங்கினார்.
இவர் உத்திர பிரதேசத்தின் ஊட்டச்சத்து திட்டத்திற்கான விளம்பர தூதராக இருக்கிறார்.