ஆய்வில் அதிர்ச்சி தகவல் …இந்திய உற்பத்தித்துறையை குறிவைக்கும் நோய்?
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பால் உற்பத்தித்திறனில் பல நூறு கோடி டாலர்கள் அளவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புற்றுநோய் பரவல் தொடர்பான ஆய்விதழில், புற்றுநோயால் மனித வளத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், இதனால் உற்பத்தித் திறனில் ஏற்படும் இழப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2012ஆம் ஆண்டில், புற்றுநோய் பாதிப்பால் இந்தியா 6.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உற்பத்தித் திறன் இழப்பை சந்தித்துள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.36 சதவீதமாகும். இந்த உற்பத்தித் திறன் இழப்பின் அடிப்படையில், தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை உதடு மற்றும் வாய்ப்புற்றுநோய் போன்றவற்றால் ஏற்படும் உற்பத்தித் திறன் இழப்பே அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் ….