எதிர்க்கட்சி தலைவர் சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார்” – முதலமைச்சர் ட்வீட்
எதிர்க்கட்சி தலைவர் சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை கடந்த சில தினங்களாக உலுக்கிய சம்பவம் சுஜித் என்ற சிறுவனின் மரணம்.இந்த சிறுவனின் மரணம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே.. சிறுவனின் மரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியினை கண்காணித்து வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை.
சிறுவனை மீட்க இவ்வளவு முயற்சிகள் செய்தும் இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் காழ்ப்புணர்ச்சியோடு பேசிவருவது வருத்தமளிக்கிறது.— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 31, 2019
இந்த நிலையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,சிறுவன் சுஜித்தை மீட்க இரவுபகல் பாராமல், மழை (ம) பண்டிகையை பொருட்படுத்தாமல் அனைத்து துறை அதிகாரிகளும் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் NDRF & SDRF, ONGC, NLC, NIT, அண்ணா பல்கலை ஆகிய நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது.மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியினை கண்காணித்து வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. சிறுவனை மீட்க இவ்வளவு முயற்சிகள் செய்தும் இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் காழ்ப்புணர்ச்சியோடு பேசிவருவது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.