சுரங்கம் வழியாக சுர்ஜித்தை மீட்க தயார் நிலையில் உள்ள வீரர்கள்..!

மணப்பாறை அருகில் நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு 2 வயது சிறுவன் சுர்ஜித் 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தற்போது வரை குழந்தையை மீட்கும் பணி 40 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று தொடர்ந்து வருகிறது.
சிறுவன்சுர்ஜித்தை மீட்க பல முயற்சி மேற்கொண்டு எல்லாம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தற்போது சிறுவன் சுர்ஜித்தை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போல் மற்றொரு குழி தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதற்காக ஓஎன்ஜிசியின் 96 டன் எடை கொண்ட ரிக் இயந்திரம் அதிகாலை 2.30 மணி அளவில் நடுக்காட்டுபட்டிக்கு கொண்டு வரப்பட்டு ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
குழி தோண்டும் இடத்தில் 17 அடிக்கு பிறகு பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதம் ஆகிறது. எனவே 100 அடி குழி தோண்ட நான்கு மணி நேரம் கூட ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் 100 அடி குழி தோண்டிய பிறகு இந்த குழியில் 3 தீயணைப்பு வீரர்களை இறக்கி விட்டு சிறுவன்சுர்ஜித்தை மீட்க திட்டம் செய்து உள்ளனர்.
100 அடி குழியில் இறங்க உள்ள வீரர்கள் அனைவரும் ஆக்ஸிஜன் உடன் தயார் நிலையில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024