அபராத தொகைகளை குறைத்த கேரள அரசு..! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்..!
மத்திய அரசு புதிய வாகன திருத்த சட்ட மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது.இதனால் முன்பு இருந்த அபராத கட்டணத்தை விட அபராத தொகை அதிகரித்தது.இந்த அபராதம் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு அபராதத்தை அதை மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.அதன்படி கேரள அரசு அபராத தொகையை குறைத்துள்ளது. முன்பு ஹெல்மெட் , சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தற்போது அதில் பாதி அளவு 500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
முன்பு வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் 10 ஆயிரமாக இருந்த அபராத தொகையை 2000 ஆக குறைத்துள்ளது. அதிக வேகத்தில் சென்றால் 5 ஆயிரமாக இருந்த அபராத தொகையை 1500 ஆக குறைத்துள்ளது.
மேலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது வசூலித்த 10 ஆயிரம் அபராதத்தை குறைக்க முடியாது என அறிவித்துள்ளது.