ஆந்திராவில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற 28 தமிழர்கள் கைது!

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ராயசோட்டி புறநகர் பகுதியில், செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக ஆந்திர எஸ்.பி. பாபுஜிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உப்பரபள்ளி பகுதியில் உள்ள கிருஷ்ணாரெட்டி ஏரி அருகே போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது செம்மரங்களை வெட்டி கடத்த தயார் நிலையில் வைத்திருந்த கும்பலை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் கற்கள் மற்றும் கோடாரிகளை போலீசார் மீது தாக்குதல் வீசிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த 28 பேரை ஆந்திரப் போலீஸார் கைது செய்தனர். மேலும், கடத்த வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என ஆந்திரப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
source: dinasuvadu.com
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024