ஈரான் தான் தாக்குதல் நடத்தியது என கண்டறியப்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்! சவுதி அமைச்சர் எச்சரிக்கை!

Default Image

சவூதி அரேபிய நாட்டிலுள்ள சில முக்கிய எண்ணெய் கிணறுகள் சென்ற வாரம் வான்வெளி தாக்குதல் மூலம் தகர்க்கப்பட்டது. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இருந்தாலும் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்க்கு ஈரான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் போர் தொடுக்க முற்பட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் சவூதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவிக்கையில், ‘ தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய நட்பு நாடுகளான, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தாக்குதலை நடத்தியது ஈரான் தான் என நிரூபணமானால், உலக நாடுகள் சபை, எண்ணெய் கிணறுகள் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை ஈரான் ஈடுகட்ட கூறவேண்டும். எனவும்,

கொமென் பிரிவினைக்கு பின்னர் ஈரான் இவ்வாறான தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது சர்வதேச விதிகளை மீறுவது போல ஆகும்.  போர் என்பது எப்போதும் கடைசி ஆயுதமாக இருக்கட்டும் எனவும், தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்