தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி! திருவாரூரில் 10 பேர் கைது!

பயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில மணிநேரத்திற்கு முன்னர், நாகூரில் சையத் அபுதாகீர் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீசார், அவரிடம் 2 மணிநேரத்துக்கும் மேலாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில், முத்துப்பேட்டையில் 10 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இவர்கள் மீது, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முத்துப்பேட்டையில் இருந்து இலங்கைக்கு கடல்வழி தூரம் குறைவு என்பதால், அப்பகுதியில் போலீசார் அதிகமாக குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், 2000 போலீசார், கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகள், கோவையின் எல்லை பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024