அகமதாபாத்தில் ஒரு நபர் வயிற்றில் 3.5 கிலோ எடை கொண்ட 452 இரும்பு பொருட்கள்:அதிர்ந்து போன மருத்துவர்கள் !

Default Image

அகமதாபாத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் இருந்த ஒரு நபருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதை தொடந்து அந்த நபரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக மருத்துவர்கள் அந்த நபருக்கு எக்ஸ்ரே செய்து பார்த்தனர்.அப்போது  அவரது வயிற்றில் உலோகப் பொருட்கள் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் நான்கு மருத்துவர்கள்கொண்ட குழு அந்த நபருக்கு அறுவை சிகிக்சை செய்ய முடிவு செய்தனர். மூன்று மணி நேர அறுவை சிகிச்சை பின் உலோகப் பொருட்களை அவரது வயிற்றில் இருந்து  மீட்டனர்.

அகமதாபாத்தின் அரசு  மருத்துவமனையின் மருத்துவர்  கல்பேஷ் கூறுகையில் , கடந்த 9-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்தோம் .அவர் அவற்றில் இருந்து  நாணயங்கள், கூர்மையான ஊசிகளும் மற்றும் பல வெளிநாட்டு நாணயங்கள் என 452 இரும்பு பொருட்கள்  வயிற்றில் அகற்றினோம் என கூறினார்.

மேலும் அவர் வயிற்றில் இருந்து 3.5 கிலோ உலோகங்கள் இருந்தது.அந்த நபர் கடந்த ஏழு அல்லது எட்டு மாதங்களாக உலோகப் பொருட்களை சாப்பிட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்