காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இறந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்…!

Default Image

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இறந்த ராணுவ வீரர் உடல் இன்று அவரது சொந்த ஊரான தூத்துக்குடியில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஷ்மீர் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச் சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் ராஜேஷ் கண்ணன்(33). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் ஆனந்தலட்சுமிக்கும்(27) திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் அரிமோஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
ராஜேஷ் கண்ணன் 6 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து சென்றார். நேற்று முன்தினம் ராஜேஷ் கண்ணன், காஷ்மீரில் பனிப்பொழிவு மிகுந்த பகுதியில் பணியில் இருந்தார். அப்போது திடீரென பனிச்சரிவில் சிக்கிய அவரை சக வீரர்கள் மீட்டு உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஷ் கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ராஜேஷ் கண்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சாத்தூரப்பநாயக்கன்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.ராஜேஷ் கண்ணனின் பெற்றோர், மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்